Monday, 2 July 2012


ஆண்டவா பிரசன்னமாகி

1.   ஆண்டவா பிரசன்னமாகி
ஜீவன் ஊதி உயிர்ப்பியும்;
ஆசை காட்டும் தாசர்மீதில்
ஆசீர்வாதம் ஊற்றிடும்
அருள்மாரி எங்கள் பேரில்
வருஷிக்கப் பண்ணுவீர்
ஆசையோடு நிற்கிறோமே;
ஆசீர்வாதம் ஊற்றுவீர்.

2.   தேவரீரின் பாதத்தண்டை
ஆவலோடே கூடினோம்;
உந்தன் திவ்விய அபிஷேகம்
நம்பி நாடி அண்டினோம்.

3.   ஆண்டவா, மெய்பக்தர் செய்யும்
வேண்டுகோளைக் கேட்கிறீர்;
அன்பின் ஸ்வாலை எங்கள் நெஞ்சில்
இன்று மூட்டி நிற்கிறீர்.

4.       தாசர் தேடும் அபிஷேகம்
இயேசுவே கடாட்சியும்;
பெந்தே கொஸ்தின் திவ்விய ஈவை
தந்து ஆசீர்வதியும்.

Saturday, 30 June 2012

அநாதியான கர்த்தரே



1.   அநாதியான கர்த்தரே
தெய்வீக ஆசனத்திலே
வானங்களுக்கு மேலாய் நீர்
மகிமையோடிருக்கிறீர்

2.   பிரதான தூதர் உம்முன்னே
தம் முகம் பாதம் மூடியே
சாஷ்டாங்கமாகப் பணிவார்
நீர் ‘தூய தூயர்’ என்னுவார்

3.   நீரோ உயர்ந்த வானத்தில்
நாங்களோ தாழ்ந்த பூமியில்
இருப்பதால் வணங்குவோம்
மா பயத்தோடு சேருவோம்.

போற்றிடு ஆன்மமே

1.   போற்றிடு ஆன்மமே சிருஷ்டி கர்த்தாவாம் வல்லோரை;
ஏற்றிடு உனக்கு ரட்சிப்பு சுகமானோரை
கூடிடுவோம் பாடிடுவோம் பரனை
மாண்பாய் சபையாரெல்லோரும்.

2.   போற்றிடு யாவையும் ஞானமாய் ஆளும் பிரானை
ஆற்றலாய்க் காப்பாரே தம் செட்டை மறைவில் நம்மை;
ஈந்திடுவார், ஈண்டு நாம் வேண்டும் எல்லாம்;
யாவும் அவர் அருள் ஈவாம்.

3.   போற்றிடு காத்துனை ஆசீர்வதிக்கும் பிரானை:
தேற்றியே தயவால் நிரப்புவார் உன் வாணளை:
பேரன்பராம், பராபரன் தயவை
சிந்திப்பாய் இப்போதெப்போதும்.

4.   போற்றிடு ஆன்மமே, என் முழு உள்ளமே நீயும்;
ஏற்றிடும் கர்த்தரை ஜீவ இ-ராசிகள் யாவும்;
சபையாரே, சேர்ந்தென்றும் சொல்லுவீரே
வணங்கி மகிழ்வாய் ஆமேன்.